திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையிலிருந்து நவம்பர் 17ஆம் தேதி, ஆயிரத்து 700 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த உபரி நீரானது தமிழ்நாடு எல்லையை வந்தடைந்த நிலையில், பூண்டி நீர்த்தேக்கத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் திருவள்ளூரின் நாராயணபுரத்தில் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இங்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளும் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் நாராயணபுரம் தரைப்பாலம் வழியாகப் பயணிப்பதைத் தடுக்கும்பொருட்டு (Thiruvallur - Thiruthani traffic stop) போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.
தொடர்ந்து சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள், திருவாலங்காடு வழியாக 15 கி.மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: 35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை