திருவள்ளூர்: நகரின் மையப்பகுதியான வி.எம்.நகர், சமரியாஸ் நகரில் வசித்து வருபவர் கணேசன் மகன் கார்த்திகேயன் (45). இவர் திருவள்ளூர் ஜே.என்.சாலையில் திருவள்ளூர் கார்ஸ் சேல்ஸ் & சர்வீஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சுமதி என்பவருடன் திருமணமாகி, ஷர்மி என்ற மகளும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி மாலை கார்த்திகேயனின் தாயார் இறந்து விட்டதால் அவருக்கு காரியம் செய்வதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு திருவள்ளூர் அடுத்த மணவாளநகருக்கு சென்றுள்ளார். பிறகு நேற்று காரியம் முடிந்து இரவு டாக்குமெண்ட் எடுப்பதற்காக கார்த்திகேயன் மட்டும் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, வீட்டின் கிரில் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், உள்ளே சென்று பார்த்தபோது கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கார்த்திகேயன் வீட்டு பீரோவை உடைத்த மர்ம நபர்கள், அதில் வைத்திருந்த 30 சவரன் தங்கநகையை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து கார்த்திகேயன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி காசிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "எங்க போனாலும் என்ன தாண்டி போங்க" - அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை!