ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர்கள்!

author img

By

Published : Nov 24, 2019, 4:01 AM IST

திருவள்ளூர்: அதிமுக பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர்கள் பெஞ்சமின், மாஃபா. பாண்டியராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

ministers-checks-the-ongoing-workings-for-the-general-committee-meetings

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கவுள்ளார். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதனை ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.

தற்போது பேனர் வைக்க தடை இருப்பதால் அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேனர், கட்சிக்கொடிகள் இடம்பெறவில்லை. அதற்கு மாற்றாக சாலையெங்கும் வாழைமரம் வைத்து அலங்கரிக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.

அதிமுகவில் ஒபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்தபின் நடைபெறும் 2ஆவது பொதுக்குழு கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலங்களின் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என 370க்கும் மேற்பட்டோர் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளைப் பார்வையிட்ட அமைச்சர்கள்

பொதுக்குழுக் கூட்டத்தை பொறுத்தவரை, அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 2,700க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள். இதுதவிர 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து தினகரனின் அமமுகவுக்கு சென்றவர்களில் பலர் மீண்டும் அதிமுகவுக்கு வந்துள்ள நிலையில், அவர்களுக்கு பதவி வழங்குவது. கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல்களை நடத்தி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து இந்த பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிங்க: 15 நாள்களில் உள்ளாட்சி தேர்தல் - ஓ. பன்னீர்செல்வம்

Intro:அதிமுகவில் ஒபிஎஸ்,ஈபிஎஸ் இணைந்த பிறகு நடைபெறும் இரண்டாவது பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட தமிழக அமைச்சர்கள்.

Body:
அதிமுகவில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். இதையடுத்து 2016 டிசம்பர் 29 ஆம் தேதி அதிமுக செயற்குழுப் பொதுக்குழு கூட்டப்பட்டு ஜெயலலிதாவின் தோழி சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனை அடுத்து ஒபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றார்.சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதை அடுத்து அதிமுகவில் ஒபிஎஸ்,ஈபிஎஸ் என இரு அணிகள் செயல்பட்டு வந்ததன. 2017 ஆம் ஆண்டு இரு அணிகளும் ஒன்று சேர்ந்ததை அடுத்து அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை இறந்த ஜெயலலிதாவிற்கு நிரந்தரமாக கொடுத்து ஒபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக,இணை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயல் பாதிப்பால் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது கூட்டத்திற்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வைக்கவுள்ளார் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வருகின்றன இதனை இன்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.Conclusion:தற்போது பேனர் வைக்க தடை இருப்பதால் அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேனர் மற்றும் கட்சிக்கொடி இடம்பெறவில்லை அதற்கு மாற்றாக சாலையெங்கும் வாழைமரம் வைத்து அலங்கரிக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் மண்டபத்தின் நுழைவாயிலில் அதிமுகவின் கட்சி அலுவலக தோற்றத்தை கட்டவுடாக வைத்துள்ளனர்.மேலும் சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.

அதிமுகவில் அணிகள் இணைந்தபின் நடைபெறும் 2-வது பொதுக்குழு கூட்டமான இதில், தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலங்களின் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என 370-க்கும் மேற்பட்டோர் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

பொதுக்குழுக் கூட்டத்தை பொறுத்தவரை, அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 2,700-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள். இதுதவிர 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து தினகரனின் அமமுகவுக்கு சென்றவர்களில் பலர் மீண்டும் அதிமுகவுக்கு வந்துள்ள நிலையில், அவர்களுக்கு பதவி வழங்குவது. கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல்களை நடத்தி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து இந்த பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.