ETV Bharat / state

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் உறுதி.. உதயநிதி துணை முதல்வர்? மு.க.ஸ்டாலின் பதில்! - Udhayanidhi Deputy CM

’ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்’ என அமைச்சரவை மாற்றம், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 11:32 AM IST

Updated : Sep 24, 2024, 12:09 PM IST

சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலை, கோட்டம்-69ல் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதனையடுத்து, ஜி.கே.எம் காலனி 12ஆவது தெரு, சென்னை துவக்கப் பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், கோட்டம்-69ல் புதியதாக கட்டப்பட்டுள்ள சென்னை துவக்கப் பள்ளி, கோட்டம்-67 மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், கோட்டம்-66 நேர்மை நகர் மயான பூமியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 16ஆம் நாள் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து, பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தினை பார்வையிட்டார்.

இதனையடுத்து, வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு முதல் தொகுதியாக சொந்த தொகுதிக்கு வந்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “இது என்னோட சொந்த தொகுதி. அவர்கள் வீட்டுப்பிள்ளை போன்று என்னை பார்க்கக்கூடிய தொகுதி. எனவே, எப்போது வேண்டுமானாலும் வருவேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு பயணம் மற்றும் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியது குறித்து, “அவர்களுடைய வெள்ளை அறிக்கை என்பது எந்த அளவு இருந்தது எனத் தெரியும். இது ஏமாற்றுகிற திட்டங்கள் அல்ல. ஏற்கனவே டி.ஆர்.பி.ராஜா தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார்” என ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க: உதயநிதி துணை முதலமைச்சர் விவகாரம்: ஆவேசமாக எழுந்து ஓடிய அமைச்சர் துரைமுருகன்.. வேலூரில் நடந்தது என்ன?

மேலும், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி விவகாரத்திற்கு ‘ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Last Updated : Sep 24, 2024, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.