கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிதி நெருக்கடியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவும் வகையில், கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் வயலூர் சுதாகர் தலைமையில், கடம்பத்தூர் ஒன்றியம் முழுவதும் உள்ள இருளர் குடியிருப்பு மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா கலந்து கொண்டு, அனைத்துப் பகுதிகளுக்கும் நேராக வீடு வீடாகச் சென்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்மனம் புதூர், அகரம் செஞ்சி, வயலூர், திருப்பந்தியூர், பன்னூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில், இதுவரை 2000 குடும்பங்களுக்கு இதுபோன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் சரஸ்வதி சுதாகர், இன்ப நாதன் மற்றும் அந்தந்தப் பகுதி ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வெட்டவெளியில் வீசப்பட்ட தரமற்ற அரிசி மூட்டைகள்; வறுமையால் அள்ளிச் சென்ற மக்கள்