ETV Bharat / state

வடசென்னை அனல் மின் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு
author img

By

Published : Jul 29, 2021, 9:59 AM IST

திருவள்ளூர்: தமிழ்நாடு மின்வாரிய தலைமை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானியுடன் அனல் மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகள் வெளியேற்றப்படும் பகுதியில் மின்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று(ஜூலை.24) ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை முடுக்கி விட்டு சாம்பல் கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் ஒரு மாதத்திற்கும் மேலாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பராமரிப்பு பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு மின் உற்பத்தி திறன் உள்ள அளவிற்கு முழுமையான மின் உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின் கட்டணம் அதிகரிப்பு என பொத்தாம் பொதுவாக கூறாமல், மின் இணைப்பு எண் குறிப்பிட்டு புகார் தெரிவித்தால் மின்வாரிய அலுவலர்கள் நேரடியாக அந்த வீட்டிற்கு சென்ற ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்

பராமரிப்பு பணிகளுக்கு 2.30 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2.72லட்சம் பராமரிப்பு பணிகள் என கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்தம் உள்ள இடங்கள் கணக்கெடுக்கபட்டு வருகிறது. அங்கு மின்கம்பிகள், மின்மாற்றிகள் மாற்ற நடவடிக்கை எடுத்து மின்தடை இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம்

அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளில் மின்வாரியம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வரும் புகாரில் உண்மையில்லை. சுற்றுச்சூழல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சீர்குலைந்துள்ள மின்சார துறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள், பணி நிரந்திர செய்ய தகுதி வாய்ந்தவர்கள் என கணக்கெடுக்கப்பட்டு பின்னர் ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை. கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்த சொத்து மற்றும் 2021ஆம் ஆண்டில் உள்ள சொத்து மதிப்பின் அடிப்படையில் வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

திமுக ஆட்சியில் நடவடிக்கை

தவறு செய்தவர்கள் மீது திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது போல தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. திமுக ஆட்சி அமைந்துள்ள 100நாட்களுக்குள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரோனா கால நிவாரண உதவி 4000 ரூபாய், நகர பேருந்துகளில் மகளிர் இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தலில் தோல்வியடைந்து மக்களால் புறக்கணிப்பட்ட அதிமுக, கடந்த கால தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு இலவச செல்போன் வழங்கினார்களா?. துறை ரீதியிலான திடீர் ஆய்வு என்பதால் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் கொடுக்கவில்லை. அனைவருக்கும் தகவல் கொடுத்துவிட்டு ஆய்வுக்கு வந்தால் குறைகளை சரிசெய்துவிடுவார்கள் என்பதால் இதுபோன்று திடீர் ஆய்வு நடத்தப்பட்டு தற்போது குறைகள் கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிளீச்சீங் பவுடர் சாப்பிட்ட சிறுமி; சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் மா.சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.