திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் மீஞ்சூர், பொன்னேரி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அனுப்பம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற மருத்துவ முகாம்மையும் அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, "கரோனா நோய்த்தொற்று அதிகம் பரவாமல் இருக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொன்னேரி, மீஞ்சூர் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தினர் உரிய முறையில் மேற்கொண்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அச்சப்படவேண்டாம்" என்றார்.