திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஜார் வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொட்டும் மழையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும், வேளாண் சட்டங்களுக்கு மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து ஆதரவளித்து நிறைவேற்றிய அதிமுக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மத்திய அரசைக் கண்டித்தும் மோடி உருவ பொம்மையை எரித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வுசெய்த முதலமைச்சர்!