திருவள்ளூர்: பூங்கா நகர் பவளமல்லி தெருவைச் சேர்ந்த கோகுல் (25) என்பவருக்கு டெலிகிராம் மூலம் சரவணன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சரவணன் தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனி வைத்துள்ளதாகவும், அதில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாகவும் கோகுலிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
முதலில் கோகுல் நான்கு லட்சம் ரூபாய் முதலீடு செய்து வருமானம் பார்த்துள்ளார். பின்னர் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
இந்நிலையில் சரவணனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கோகுல் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டம் ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் முன்னிருத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தமிழிசை பற்றி விமர்சனம்: நாஞ்சில் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு