ETV Bharat / state

அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் - காவல் துறையினர் விசாரணை

தைலம் தோப்பில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண் சடலம்
ஆண் சடலம்
author img

By

Published : Sep 29, 2021, 12:59 PM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த தைலம் தோப்பில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை அப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற பெண் ஒருவர் பார்த்து, ஊராட்சித் தலைவர் ரவிக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து ரவி, சிப்காட் நிலைய காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், அந்நபர் சுமார் ஏழு நாள்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அவர் கையில் ராக்கி கயிறு இருப்பதால் வடமாநில இளைஞராக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரின் உடலில் முக்கிய உடல் பாகம் துண்டிக்கப்பட்டிருந்தால், இக்கொலையானது திருமணத்தை மீறிய உறவின் காரணமாகச் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற சிறுவர்கள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.