ETV Bharat / state

கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணின் ஆடைகளை கழட்ட வைத்தவர் கைது - Man robbery 1 and half pound jewel

திருவள்ளூர்: பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஆடைகளை கழட்ட வைத்து அவரிடமிருந்து நகையைப் பறித்தவரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

man
man
author img

By

Published : Oct 4, 2020, 5:25 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரும் திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவியும்‌ தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இதனால் சரவணனும் அவரது மனைவியும் தேவி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். சரவணன் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே, தேவியிடம் சரவணன் அடிக்கடி பணம் கேட்டு வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் சரவணன் பணத்தை திருப்பித் தராமல் இருந்துள்ளார். இது குறித்து தேவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரினால் ஆத்திரமடைந்த சரவணன் கடந்த 26ஆம் தேதி இரவு தேவி வீட்டிற்குள் ரகசியமாக சென்றுள்ளார். அப்போது தேவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஆடைகளை கழட்ட வைத்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து தேவி கொடுத்த புகாரின் பேரில் மணவாளநகர் காவல் துறையினர் சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.