ETV Bharat / state

வீடு வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்தவர் கைது - money laundering

திருவள்ளூரில் வீடு வாங்கித் தருவதாகக்கூறி ஆறு நபர்களிடம் ரூ. 15 லட்சம் பணம் மோசடி செய்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

வீடு வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்தவர் கைது

author img

By

Published : Aug 3, 2021, 10:47 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரம் அகரம் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ், அவரது மனைவி ஞான ரோஸ்லீன் ஆகியோர் தொடர்புகொண்டு தங்களது உறவினர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பெரிய பதவிகளில் இருப்பதாகவும், இதனால் திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு வாங்கித் தருவதாக ரூ. 2 லட்சத்து,50 ஆயிரம் வாங்கியுள்ளார்.

அதேபோல் ஐந்து நபர்களிடம் ரூ. 12 லட்சத்து,50 ஆயிரம் என மொத்தம் ரூ. 15 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு போலியான குடியிருப்பு அனுமதிச் சீட்டு, மாற்று இடம் வழங்கிட அடையாள சீட்டு ஆகியவற்றை தயார்செய்து கொடுத்துள்ளனர்.

இவை போலியானது என்பது தெரியவந்ததையடுத்து கண்ணன் என்பவர் திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் கொடுத்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் மணவாளநகரில் பதுங்கியிருந்த பவுல்ராஜ் என்பவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'மீன் குழம்பால் வந்த வினை - உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.