ETV Bharat / state

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் மாளந்தூர் சாலையில் விபத்துகள் அதிகரிப்பு! - malanthur people request to solved road damage issue

திருவள்ளூர்: மாளந்தூர் சாலையை சீரமைக்காமல் நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டிவருவதால் அச்சாலையில் தினந்தோறும் விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

malanthur people request to solved road damage issue
author img

By

Published : Nov 5, 2019, 11:38 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் சீத்தஞ்சேரி முதல் வெங்கல் செல்லும் மாளந்தூர் சாலையில் தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தப்பாலத்திற்கு முன்னும் பின்னும் சுமார் 500 மீட்டர் தொலைவிற்குச் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்தச் சாலைகளில் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன.

நேற்று சென்னையைச் சேர்ந்த தம்பதிகள் இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வரும் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது இருவரும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிதிலமடைந்துள்ள இச்சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை இப்பகுதி மக்கள் புகாரளித்துள்ளனர். இருந்தபோதிலும் தற்போது வரை நெடுஞ்சாலைத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பது தெரிகிறது.

சேதமடைந்துள்ள மாளந்தூர் சாலை

இரவு நேரங்களில் அதிகப்படியான விபத்துகள் இந்தப்பகுதியில் ஏற்படுவதால் நெடுஞ்சாலைத்துறை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மக்காச்சோளத்தில் படைப்புழு: கட்டுப்படுத்தும் மருந்து தெளிப்பின் செயல்விளக்கம்!

Intro:05-11-2019

திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி
முதல் வெங்கல் வரை செல்லும் நெடுஞ்சாலை முறையான பராமரிப்பு இன்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக படுகாயம் அடைந்து பகுதிவாசிகள் நெடுஞ்சாலைத்துறையினர் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Body:திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி
முதல் வெங்கல் வரை செல்லும் நெடுஞ்சாலை முறையான பராமரிப்பு இன்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக படுகாயம் அடைந்து பகுதிவாசிகள் நெடுஞ்சாலைத்துறையினர் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம்
சித்தஞ்சேரி முதல் வெங்கல் செல்லும் மாலந்தூர் சாலையில்
தரைபாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சாலையில் இருபுறமும் சுமார் 500 மீட்டர் அளவிற்கு சேதமடைந்துள்ளது அதனை பணியை எடுத்த ஒப்பந்த நிறுவனத்தார் முடிக்காமல் விட்டு வைத்துள்ளனர்.எனவே இதை கடந்துசெல்லும் பொது மக்கள் இரவு நேரங்களில் சாலை நன்றாக உள்ளது என்று எண்ணத்தில் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது நேற்று இரவு சென்னையை சேர்ந்த தம்பதிகள் இருவர் இவ்வழியாக சென்ற போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருவரும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .
சிதிலம் அடைந்த சாலை குறித்துபல முறை புகார் தெரிவித்தும் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியப் போக்கை காட்டி வருவதற்கு பொது மக்களும் வாகன ஓட்டிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்ததுடன் இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இவ்வழியாக இரவு நேரங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர் எனவே திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு சாலை யை சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.