ETV Bharat / state

மதிய உணவில் பல்லி: தனியார் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திடம் போலீஸ் விசாரணை! - மதிய உணவில் பல்லி

திருவள்ளூர்: தனியார் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்தால் அதை சாப்பிட்ட ஆறு ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

Lizard
Lizard
author img

By

Published : May 5, 2021, 9:45 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் ஒதப்பை கிராமத்தில் டி ஆர் எண்டர்பிரைசஸ் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சிற்றுண்டி, மதிய உணவு உள்ளிட்டவை நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், நேற்று (மே 4) மதியம் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மதிய உணவு அருந்தி கொண்டிருந்தபோது உணவில் பல்லி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் ஆறு ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களை சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் சுகாதாரத் துறையினர், தனியார் நிறுவனத்தில் உள்ள உணவகத்தை மேற்பார்வையிட்டனர். அப்போது அங்கு குடிநீர், மீதமிருந்த உணவு கெட்டுப் போன நிலையில் துர்நாற்றம் வீசியதால் டிஆர் நிறுவன மனிதவள மேலாண்மை குழுவிடம் உணவகத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கும்படி அவர்களிடம் அறிவுறுத்தினார்.

உணவில் பல்லி விழுந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பென்னாலூர்பேட்டை காவல்துறையினர் டி.ஆர். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.