திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள், தமிழ்நாடு காவல் துறை, போக்குவரத்துத் துறையுடன் இணைந்து மரக்கன்றுகளை கொடுத்தும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர ஆய்வாளர் சுரேந்தர் பேசுகையில் ”சட்டக்கல்லூரி மாணவர்கள் இப்படிப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வாகனத்தில் வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். அதுமட்டுமில்லாமல் கல்லூரி மாணவர்கள் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர உதவி ஆய்வாளர் சக்திவேல், பழனி, சட்டக்கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 50 முட்டைகளில் 50 இந்தியத் தலைவர்களின் முகங்கள் - சாதனை படைத்த கல்லூரி மாணவி