திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்தும் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டிக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. அதனடிப்படயில், துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கஞ்சா விற்பனை செய்த சட்டக்கல்லூரி மாணவர் வசந்த் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன்பின், வசந்திடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: