ETV Bharat / state

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து வெளியேற மறுத்து நரிக்குறவ இனத்தினர் போராட்டம்! - திருமுல்லைவாயல்

திருவள்ளூர்: திருமுல்லைவாயலில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குடிசையமைத்திருந்த நரிக்குறவ இனமக்கள், அங்கிருந்து வெளியேற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

protest
author img

By

Published : May 8, 2019, 6:50 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் பகுதியை சார்ந்த தொழில் அதிபர் சிவசுப்பிரமணியம் என்ற வாசு ( 58). இவருக்கு திருமுல்லைவாயல் பழைய காவல் நிலையம் அருகே சி.டி.எச் சாலையில் 23 கிரவுண்டு காலியிடம் உள்ளது. இதற்கு பின்புறம் உள்ள 10 கிரவுண்டு இடத்தில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் வாசுவின் இடத்தை ஆக்கிரமித்து குடிசை வீடுகள் அமைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கும், தனது இடத்தை தன்வசப்படுத்தவும் வாசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கடந்த மார்ச் 15ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற மூன்று வாரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தேர்தல் பணி காரணமாக காவல்துறை பாதுகாப்பு வழங்காததைத் தொடர்ந்து, இடத்தின் உரிமையாளர் வாசு மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினார். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய பாதுகாப்பு உடனடியாக வழங்க வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் அம்பத்தூர் மற்றும் ஆவடி காவல் துணை ஆணையர்கள் ஈஸ்வரன், ஜான் சுந்தர், திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவ இன மக்கள்

அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியபோது 40க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதோடு, ஒரு சிலர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தனர். அவர்களின் குடிசை வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் அவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

இதற்கிடையில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்த ஒரு குடிசை வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. பின்னர் அப்பகுதியை ஆக்கிரமித்திருந்த பத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். மேலும் காலி இடத்தை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில், இரண்டு மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.

08.05.19
திருவள்ளூர்
ஆவடி_ஆ.கார்த்திக்

திருமுல்லைவாயலில் நரிக்குறவர் இனமக்கள் ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் இருந்து வெளியேற எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு யுக்திகளை கையாண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் பகுதியை சார்ந்தவர் சிவசுப்பிரமணியம் என்ற வாசு ( 58). இவர் தொழில் அதிபர். இவருக்கு திருமுல்லைவாயல் பழைய காவல் நிலையம் அருகே சி.டி..எச் சாலையில் 23கிரவுண்டு காலியிடம் உள்ளது. இதற்கு பின்புறம் 10கிரவுண்டு இடத்தில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் வாசு இடத்தை ஆக்கிரமித்து குடிசை வீடுகள் அமைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கும், தனது இடத்தை தன்வசப்படுத்தவும் வாசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கடந்த மார்ச் 15ந்தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற 3வாரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  இதனையடுத்து, தேர்தல் பணியில் இருந்ததால் போலீசார் ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக பாதுகாப்பு வழங்கவில்லை. இதன் பிறகு, இடத்தின் உரிமையாளர் வாசு மீண்டும்  உயர்நீதிமன்றத்தை நாடினார். இதனை அடுத்து, உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு அகற்ற உரிய பாதுகாப்பு உடனடியாக வழங்க வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் ஜான் சுந்தர், திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும்ம் பணி தொடங்கினர். அப்போது 40க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் ஒரு சிலர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனை அடுத்து, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். ஆனால், அவர்கள் குடிசை வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் அவர்கள் அனைவரையும்  வலுக்கட்டாயமாக  கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். பின்னர், போலீசார் அவர்களை திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். இதற்கிடையில், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்த ஒரு குடிசை வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதன் பிறகே போலீசார் பாதுகாப்புடன் அங்கு ஆக்கிரமித்திருந்த பத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். பின்னர், போலீசார் பாதுகாப்புடன் காலி இடத்தை சுற்றி முள்வேலி அமைக்கும் நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில், நேற்று காலை இரண்டு மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.