நிவர் புயல் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் கொள்ளளவு 22 அடிக்கு மேல் சென்றது. அதனால், கடந்த 25ஆம் தேதி உபரி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக உயர்த்தப்பட்டது. அதனால் குன்றத்தூர் -ஸ்ரீபெரும்புதூர் சாலை பாதுகாப்பு காரணமாக துண்டிக்கப்பட்டது.
அதன் காரணமாக, அந்தச் சாலையை முதன்மையாகக் கொண்ட 30.க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதி மக்கள் சாலையை திறக்க கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில், பொதுப்பணித்துறை அலுவலர்கள் 12 மீட்டர் நீளமுள்ள ராட்சத பைப்புகள் மூலம் தற்காலிக பாலம் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டனர். அதனை ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த தற்காலிக சாலையில் கார், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இதையும் படிங்க: ரூ.14 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே கீழ் பாலத்தில் சூழ்ந்த மழை நீர்- அவதியில் பொதுமக்கள்!