திருவள்ளூர் கொண்டஞ்சேரி பகுதியில் பரிசுத்த மெய்தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் பாஸ்டராக உள்ள தாஸ் என்பவருக்கும்; கூவம் பேருந்து நிலையம் அருகே உள்ள சார்லஸ் என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
பாஸ்டர் தாஸ் தேவாலயத்திற்கு வரும் சில பெண்களிடம் தவறான தொடர்புவைத்திருப்பதாகவும்; தேவாலயத்தின் கணக்கு வழக்குகளை சரிவர காட்டாமல் மறைப்பதாகவும்; இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில், பாஸ்டர் தாஸின் அடியாட்கள் நேற்று இரவு சார்லஸின் வீட்டுக்குள் புகுந்து சார்லஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.
காயமடைந்த அனைவரும் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே சார்லஸின் வீட்டுக்குள் 5க்கும் மேற்பட்ட பாஸ்டர் தாஸின் அடியாட்கள் புகுந்து தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து சார்லஸின் சகோதரர் சத்தியமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இரவு நேரத்தில் வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போலி நிலக்கரி இறக்குமதி முறைகேடு - தொழிலதிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி!