ETV Bharat / state

இந்திரா கல்வி குழுமத்தின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடக்க விழா

திருவள்ளூர்: பாண்டூரில் இந்திரா கல்வி குழுமத்தின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடக்க விழா நடைபெற்றது.

author img

By

Published : Feb 10, 2021, 3:16 PM IST

இந்திரா கல்வி குழுமத்தின் மருத்துவக் கல்லூரி

திருவள்ளூர் மாவட்டம் பாண்டூரில் ஒரு ஆசிரியர் 25 மாணவர்களுடன் சிறிய குடிசையில் இந்திரா கல்வி மற்றும் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தற்போது வளர்ச்சியடைந்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு நிறுவனங்களை தொடங்கி, சேவை வழங்கி வருகிறது.

அதில் ஒரு அங்கமாக இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் இயக்குநர் கவிதா ராமு பாரத் திறந்துவைத்தார். இதில் எம்.பி., ஜெகத்ரட்சகன், முன்னாள் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திரா கல்வி அறக்கட்டளை தலைவர் விஜி ராஜேந்திரன் பேசுகையில், "இந்த மருத்துவமனையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நம்பிக்கை மற்றும் நல்வாழ்வின் அடையாளமாக இருக்கும். நோய் தொடர்பான மக்களிடம் இருக்கும் அச்சத்தை போக்கும்.

உண்மையான வெற்றி என்பது குறுகிய காலத்தில் இலக்குகளை அடைவதில்லை. சமுதாயத்திற்கு சிறந்த பங்காற்றுவது உண்மையான வெற்றியாகும். இந்த மருத்துவமனையில் 75 மாணவர்கள், 68 மாணவிகள் என 143 பேருக்கு 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவக் கல்லூரிகளின் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.