ETV Bharat / state

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர் - minister vijayabaskar

திருவள்ளூர்: காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக செய்துவருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar
author img

By

Published : Sep 27, 2019, 4:31 PM IST

திருவள்ளூரில் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி, தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் தனியார் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் பேசிய தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக இரண்டு முறை முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுகாதாரத்துறை அலுவலர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மூன்று விழுக்காடு காய்ச்சல் குறைவாக உள்ளது.

புதிய சேமிப்பு கிடங்கு திறப்பு விழா

காய்ச்சல் இறப்பு இல்லாத நிலையை உருவாக்குவதற்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்கும் நடவடிக்கையையும், அரசு மருத்துவமனையில் வசதிகளை மேம்படுத்தவும் தனி வார்டுகளை ஏற்படுத்தவும் வேண்டிய வசதிகளை அரசு எடுத்துள்ளதால் பொதுமக்கள் பதற்றமடைய தேவையில்லை.

காய்ச்சல் என தெரிந்தவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருந்தது. அது தற்போது கட்டுக்குள் இருக்கிறது’ என்றார்.

Intro:மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தமிழக மக்கள் நல்வாழ்வு துறைBody:மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக செய்து வருவதாக அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

இரண்டு முறை முதலமைச்சர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3% காய்ச்சல் குறைவாக உள்ளதாக அமைச்சர் அமைச்சர் தெரிவித்தார்.காய்ச்சல் இறப்பு இல்லாத நிலையை உருவாக்குவதற்கு அரசு மீது கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளது தமிழகம் முழுக்க கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்கும் நடவடிக்கையையும் அரசு மருத்துவமனையில் வசதிகளை மேம்படுத்தவும் தனி வார்டுகளை ஏற்படுத்தவும் வேண்டிய வசதிகளை அரசு எடுத்துள்ளதாகவும் பதட்டமடைய தேவையில்லை நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் காய்ச்சல் கண்டவுடன் தாமதப்படுத்தாமல் அலட்சியப்படுத்தாமல் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருந்தது இந்த ஆண்டு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.