ETV Bharat / state

திருத்தணியில் தங்கத்தேரில் எழுந்தருளிய முருகன் - திரளான பக்தர்கள் தரிசனம் - Tiruthani Subramania Swami Temple

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு முருகப்பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Etv Bharatதிருத்தணியில்  தங்கத்தேரில் எழுந்தருளிய முருகன் -  மாடவீதியில் வலம் வந்த பக்தர்கள்

author img

By

Published : Jan 2, 2023, 7:16 AM IST

திருத்தணியில் தங்கத்தேரில் எழுந்தருளிய முருகன்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை கோயிலாகும். இந்த திருக்கோயிலில் புத்தாண்டு நிகழ்ச்சி நேற்று (ஜன. 1) வெகு விமர்சியாக நடைபெற்றது. அந்த வகையில் நேற்றிரவு மலைக்கோயில் உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு தங்க ஆபரணம், புஷ்ப அலங்காரங்கள் செய்யப்பட்டு வள்ளி தேவயானை சமயதராய் தங்கத்தேரில் எழுந்தருளினார்.

இந்த தங்கத்தேரை முருக பக்தர்கள் வடம் பிடித்து கோயிலில் உள்ள மாட வீதியில் பவனி வந்தனர். இதனிடையே முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:ரூ.6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.