திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசின் ராவுத்தர். ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.
பணி முடிந்து மாலை வீடு திரும்பியபோது முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசின் ராவுத்தரின் மனைவி வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது பீரோவில் வைத்திருந்த ஆறு பவுன் தங்கநகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பின்னர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கு பெற்ற விநோதக் கோயில் திருவிழா!