திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா பொன்பாடியில் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை தணிக்கை செய்வதற்காக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வந்த பேருந்தில் போலீசார் சோதனை செய்யும் பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் அமர்ந்திருந்த நான்கு வாலிபர்களை பிடித்து அவர்களது உடமைகளையும் சோதனை செய்தனர்.
சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருப்பதனை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் 54 கிலோ கஞ்சாவை அந்த நான்கு வாலிபர்களிடம் இருந்து கைப்பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நான்கு பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது. அவர்களில், கணேஷ்-சென்னை அயப்பாக்கத்தையும், வசந்தகுமார் சென்னை அயனாவரத்தையும், செல்வராஜ் சென்னை கொரட்டூர் பகுதியையும், சுரேஷ் சென்னை அருகில் உள்ள ஆவடியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இதனையடுத்து நான்கு பேர் மீதும வழக்கு பதிவு செய்யப்பட்டு திருத்தணி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின் நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம்... பத்திர பதிவுத்துறை கூடுதல் ஐஜி சஸ்பெண்ட் - தமிழ்நாடு அரசு அதிரடி