திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அவுரிவாக்கம் கீழ்குப்பம் பகுதியில் சிலர் பாலிகீட்ஸ் எனப்படும் செம் புழுக்களை கடத்தி வருவதாக மீனவர்கள் வனத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கீழ்குப்பம் பகுதியில் செம் புழுக்களை எடுத்துக் கொண்டிருந்த நான்கு பேரை மீனவர்கள் சிறை பிடித்தனர். பின்னர் வனத்துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த எல்லையன், மாலிக், ஜாபர், அசார் ஆகியோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா காரணமாக சாத்தனூர் அணை மார்ச் 31 வரை மூடப்படும்