ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் சித்தூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கனஅடி நீர் திறந்து, வெளியேற்றப்பட்டுவருகிறது.
இந்த நீர் திறப்பின் அளவு உயர்த்தப்படவுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறி, பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றைச் சுற்றியுள்ள மக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
மேலும், இது குறித்து வருவாய்த் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறைகளுக்கு ஏற்கனவே தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.