ETV Bharat / state

மின்வயரில் உரசிய கண்டெய்னர்: பற்றியெரிந்த 3 வாகனங்கள்! - நெடுஞ்சாலை விபத்து

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே பழுதுநீக்கம் செய்யவந்த கண்டெய்னர் லாரி மின்சார வயரில் உரசியதையடுத்து மூன்று வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

fire accident
fire accident
author img

By

Published : Jun 9, 2020, 10:34 AM IST

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (49) என்பவர் நேற்று (ஜூன் 8) மாலை கண்டெய்னர் லாரியை ஓட்டிவந்தார்.

அப்போது கண்டெய்னர் பழுதானதால் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் உள்ள வாகனங்கள் பழுதுநீக்கும் இடத்திற்கு லாரியை எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, உயர் அழுத்த மின்சார வயர் மீது உரசியதில் கண்டெய்னர் டயர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைக் கண்டதும் ஓட்டுநர் வாகனத்திலிருந்து கீழே இறங்கிவிட்டார். இந்தத் தீயானது அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு லாரி, இருசக்கர வாகனத்திற்கும் பரவியதில் மூன்று வாகனங்களும் தீப்பிடித்து மளமளவென எரிந்தன.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மூன்று வாகனங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இதனை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் நின்று பார்த்துச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தத் தீவிபத்தில் மூன்று வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின. இதில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை இந்தச் சம்பவம் குறித்து பூந்தமல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மின்சக்தித் துறையில் இந்தியா- டென்மார்க் ஒப்பந்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.