ETV Bharat / state

குன்றத்தூர் அருகே பழைய பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து! - godown fire accident in kundranthur

திருவள்ளூர்: குன்றத்துார் அடுத்த திருமுடிவாக்கத்தில் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்துவருகின்றனர்.

fire
plastic godwon fire
author img

By

Published : Sep 24, 2020, 6:18 PM IST

திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சிப்காட் பகுதியில் குரோம்பேட்டையைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பழைய நெகிழிப் பொருள்களை மறுசுழற்சி செய்யும் கிடங்கு செயல்பட்டுவருகிறது.

இந்தக் கிடங்கிலிருந்து இன்று (செப். 24) காலை திடீரென புகை அதிகளவில் ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்ததும் பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய பகுதிகளிலிருந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தக் கிடங்கில் முழுவதும் பழைய நெகிழிப் பொருள்கள் இருந்ததால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

மேலும் கரும்புகைகள் விண்ணைமுட்டும் அளவிற்கு எழும்பியதால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

இந்தப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிகளவில் குடோன்கள் செயல்பட்டுவருவதால் அடிக்கடி தீ விபத்துகளும், கொள்ளை சம்பவங்களும் நடந்துவருகின்றன. இதனைக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

தீ விபத்து காரணமாக இந்தப் பகுதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பல மின் கம்பங்களிலிருந்த மின்சார வயர்கள் கருகியது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.