திருவள்ளூர்: திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடு குப்பம் ஊராட்சியில் 37 ஏக்கர் பரப்பளவில் குப்பம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் சுமார் 10 ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்து பயிர் செய்து வருவதாக தெரிகிறது.
இது குறித்து ஆற்காடு குப்பம் விவசாயிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர் கோரிக்கை வைத்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. பின்னர் அங்கு திருவாலங்காடு ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், இது ஏரி பகுதி இதனை ஆக்கிரமித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏரிக்கு நீர் வரும் பாதையான கால்வாய் மீட்கப்படவில்லை. இதுவரை அளவீடு செய்யப்படாததே இதற்கு காரணம் என வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆற்காடு குப்பம் விவசாயிகள் கூறியதாவது, "அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். 8 மாதத்திற்கு முன் திருவள்ளூர் வருவாய் அதிகாரிகள் இதுவரை கால்வாயை அளவீடு செய்யவில்லை. அளவீடு செய்து கால்வாய் தூர்வாரப்பட்டால் மட்டுமே ஏரி நிரம்பும். இதனால் விவசாயிகளான நாங்கள் தான் பாதிக்கிறோம்" இவ்வாறு கூறினர்.
இதையும் படிங்க:அடுத்த ஆண்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன்