திருவள்ளூர்: திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆவடியில் முன்னாள் அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற்றது.இதில் திமுக இளைஞரணி தலைவரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்கு என 1.50 கோடி ரூபாயை மாவட்ட செயலாளர் நாசர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இதேபோன்று தெற்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் தலா 1 கோடி ரூபாய் நிதியை வழங்கினர்.
இதனையடுத்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசுகையில், "சேலம் இளைஞரணி மாநாட்டிற்கு அழைக்க தான் வந்தேன், ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு என்னை விட நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள் போல தெரிகிறது" என்றார்.
இதையும் படிங்க:சீமானுக்கு எதிரான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் துணை ஆணையர் விசாரணை!
தொடர்ந்து பேசிய அவர், "திருவள்ளூர் மாவட்டம் தான் திராவிட இயக்கத்தின் தாய் வீடு மேலும் திருவள்ளூர்,அம்பத்தூர் தொழிற்பேட்டை,கும்மிடிப்பூண்டி, உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் 90% கலைஞர் துவங்கியது தான் என பெருமிதம் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் பொழுது கூட நீட் தமிழ்நாட்டில் நுழையவில்லை. ஜெயலலிதா அம்மையார் மறைந்த பிறகு நீட் நுழைந்தது. அடிமை அதிமுகவினர் பாஜக உணவை திருப்திப்படுத்த நீட் தேர்வை நம்முடைய தமிழ்நாட்டில் நுழைத்தார்கள். நீட் தேர்வினால் கடந்த 2017 அரியலூர் மாவட்டதில் முதல் தற்கொலை அனிதா முதல் இன்று வரை 21 பேர் உயிரிழப்பு இதற்காக உயிரிழந்துள்ளனர். இதை எதிர்த்துதான் கடந்த 20 ஆம் தேதி உண்ணவிரத போரட்டத்தை நடத்தினோம்.
தமிழ்நாட்டில் நீட் அகற்ற முழு முயற்சி மேற்கொள்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்யும் நாள்தான் முழுவெற்றியே, இதற்கு நான் ஒருவன் மட்டும் செய்ய இயலாது நீங்கள் ஒவ்வொருவரும் உதயநிதியாக மாறி இறங்கி போராட வேண்டும்" என இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: "இந்தியாவே அறிவாலயத்தின் வாசலை உற்று நோக்குகிறது" - பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் திருச்சி சிவா பேச்சு