திருவள்ளூர்: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை ஒப்பந்த தொழிலாளர்களாக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கடந்த 17- ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு உரிய உத்தரவாதம் அளிக்காததால் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, நெல்லூர் என அடுத்தடுத்து கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆந்திராவில் போராடிய தொழிலாளர்கள் தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் திரும்பினர்.
மின்சாரத்தை நிறுத்தி விட்டு மின்மாற்றியிலும், மின்கம்பத்திலும் ஏறி போராட்டம் நடத்தினர். மேலும் சாலையில் அமர்ந்தும் தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்து காவல் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றியில் இருந்தும், மின்கம்பத்தில் இருந்தும் தொழிலாளர்களை கீழே இறக்கினர். பின்னர் அனைவரும் ரயில் மூலம் சென்னைக்கு திரும்பினர்.
இதையும் படிங்க: கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் சிக்கிய நபருக்கு பாஜக பயிற்சி ? சபாநாயகர் பரபரப்பு பேட்டி