ETV Bharat / state

வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக வெளிநடப்பு!

author img

By

Published : Oct 28, 2020, 5:43 PM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற சிறப்பு ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Meeting of Special Union Councilors
திமுக வெளிநடப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், ஒன்றியக்குழு பெருந்தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், அவற்றை திரும்பப் பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுகவினர் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் திமுகவைச் சேர்ந்த துணை ஒன்றியக்குழு தலைவர் மாலதி குணசேகரன் தலைமையில், தோழமை கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட 14 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.