திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம், திருவள்ளூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆகஸ்ட் 31ஆம் தேதி, நடைபெற உள்ள ஆய்வு கூட்டத்தில், வருகை தர உள்ள திமுக இளைஞரணி செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வருகிற 31ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தர இருப்பதால், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திமுக சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் மாவட்ட செயலாளர், திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியதாவது, "திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வருகிற 31-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தர இருப்பதால் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதனைதொடர்ந்து, மாவட்ட எல்லையான ஒண்டிக்குப்பம் பகுதியில் இருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இரு வண்ணக் கொடி ஏந்தி, வெள்ளை சீருடை அணிந்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
மேலும், 31ஆம் தேதி மாலை நடைபெற உள்ள மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமை நடைபெற இருப்பதால், கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், பெருந்திரளான இளைஞர்கள் வெள்ளை சீருடையில் வருகை தர வேண்டும். வருகிற டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும், வெள்ளை சீருடையில் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்று தெரிவித்தார். மேலும் இந்த செயல் வீரர்கள் அவசர செயல் குழு கூட்டத்தில் திமுக மாவட்ட நிர்வாகிகள், இளைஞரணி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வு ரத்து என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்க வேண்டும்' - பெ.மணியரசன் வலியுறுத்தல்!