ETV Bharat / state

வாடகைப் பாக்கி: வடமாநில இளைஞர்களை சரமாரி தாக்கிய தேமுதிக நிர்வாகி! - Rental arrears problem

குன்றத்தூர் அருகே வாடகைப் பாக்கி தராமல் சொந்த ஊருக்குச் செல்ல முயன்ற வடமாநில இளைஞர்களை சரமாரியாகத் தாக்கிய தேமுதிக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சுரேஷ் ராஜ்
சுரேஷ் ராஜ்
author img

By

Published : May 20, 2021, 11:32 AM IST

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் சாகு (32). இவர், தனது சகோதரர் பிரதாப் சாகு என்பவருடன் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் தங்கி, தனியார் நிறுவனங்களுக்குப் பணி செய்ய வடமாநில இளைஞர்களை வழங்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இங்கு பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களை, தேமுதிக காஞ்சிபுரம் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் சுரேஷ்ராஜ் (40) என்பவர் வீட்டில் வாடகைக்குத் தங்க வைத்திருந்தார்.

வடமாநில இளைஞர்களைத் தாக்கும் தேமுதிக நிர்வாகி!

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு உரிமையாளர் சுரேஷ்ராஜூக்கு வடமாநில இளைஞர்கள் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் வாடகைப் பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக, வடமாநில இளைஞர்கள் தங்களது சொந்த ஊருக்கு கிளம்பி செல்வதை அறிந்து கொண்டு சுரேஷ் ராஜ் நேற்று (மே.19) இரவு அவர்களது வீட்டிற்குள் சென்று வடமாநில இளைஞர்களை பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக அடித்தும் உதைத்துள்ளார்.

இச்சம்பவத்தை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அந்த வீடியோ காட்சிகளில் சுரேஷ் ராஜ் வடமாநில இளைஞர்களை முட்டி போட வைத்தும், உடலில் சட்டை போடாமலும் சரமாரியாக அடித்து உதைக்கிறார்.

இதில் வலித்தாங்க முடியாமல் அந்த இளைஞர்கள் துடித்து காலில் விழுகின்றனர். ஆனால் சுரேஷ் ராஜ் விடாமல் அவர்களை அடித்து உதைக்கிறார். இதையடுத்து குன்றத்தூர் காவல்துறை ஆய்வாளர் சந்துரு, காவல்துறை உதவி ஆய்வாளர் அந்தோனி சகாய பாரத் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுரேஷ்ராஜை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், வடமாநில இளைஞர்களை சரமாரியாக அடித்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வாடகைப் பாக்கி தராமல் சொந்த ஊருக்குச் செல்ல முயன்ற வட மாநில இளைஞர்களை தேமுதிக பிரமுகர் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கிருமி நாசினி கொண்டு போலி மதுபானம் தயாரித்த ஆறுபேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.