ETV Bharat / state

செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவலரை வெகுமதியுடன் பாராட்டிய எஸ்பி

திருவள்ளூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் நடந்து சென்ற நபரிடம் செல்போனை பறித்து ஓடிய மூன்று நபர்களை துரத்திப் பிடித்த ஆயுதப்படை காவலரை அழைத்து வெகுமதியாக ஆயிரம் ரூபாய் வழங்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பாராட்டினார்.

District Superintendent Varunkumar rewarded cop for chasing chain snatchers

author img

By

Published : Oct 1, 2021, 9:55 AM IST

திருவள்ளூர்: அய்யனார் அவென்யூவைச் சேர்ந்த இமானுவேல் ராஜசேகர் தன்னுடைய செல்போனில் பேசிக் கொண்டே ஜே.என். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 3 பேர் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்றனர். அப்போது, அந்த வழியாக சென்ற ஆயுதப்படை காவலர் முருகேசன் இதைப்பார்த்ததும், இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் அவர்களை மடக்கி பிடித்த போது, இளைஞர்கள் 3 பேரும் சேர்ந்து காவலர் முருகேசன்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனை சமாளித்துக் கொண்டு 2 பேரை மட்டும் மடக்கி பிடித்தார். இதில் ஒருவர் மட்டும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆயுதப்படை காவலர் முருகேசன் பிடித்து வைத்திருந்த 2 பேரையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், செல்போன் திருட்டில் ஈடுபட்டது ராஜாஜிபுரம் ஜெயராமனின் மகன் கஜா என்கிற கஜேந்திரன் (22) என்பதும், கலைஞர் கருணாநிதி நகர், 3ஆவது தெருவைச் சேர்ந்த குமார் மகன் மதன்குமார் (22) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், தப்பியோடியவர் கோயில்பதாகையை சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீதும் வழிப்பறி வழக்குகள் உள்ளதும் அம்பலமானது.

இந்த சம்பவம் குறித்து இமானுவேல் ராஜசேகர், ஆயுதப்படை காவலர் முருகேசன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும், தப்பி ஓடிய கோவில்பதாகைச் சேர்ந்த விஜயை தேடி வருகின்றார். இந்த சம்பவத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் திருடர்களை துரத்திச் சென்று அவர்களின் தாக்குதலை சமாளித்துக் கொண்ட ஆயுதப்படை காவலர் முருகேசனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தனது அலுவலகத்திற்கு அழைத்து அயிரம் ரூபாய் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இதையும் படிங்க: 'சிங்கம் 2'வில் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.