ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்!

author img

By

Published : Apr 8, 2021, 12:31 AM IST

திருவள்ளூர்: வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேப்பம்பட்டிலுள்ள தனியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியும், வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளேயும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும் நபர்கள் குறித்த விவரங்களும், அவர்கள் முறையான அனுமதி பெற்றுள்ளார்களா என்பதை விசாரித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மத்திய ஆயுதப்படை தமிழ்நாடு காவல் துறை, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணும் நிலையத்திற்குள்ளே வரவும், வெளியே செல்லவும் உள்ள வழிகள் குறித்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் காவல் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், “பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. வெளியாள்கள் உள்ளே வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வளாகத்திற்குள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மே 2ஆம் தேதி வரை இந்த பாதுகாப்புப் பணிகள் எந்த ஒரு தொய்வுமின்றி தொடரும்” எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், காவல் நகர துணை கண்காணிப்பாளர் துரை பாண்டியன், குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் அசோகன் உள்ளிட்ட ஏராளமான காவல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.