ETV Bharat / state

செங்கல் சூளையில் பணிபுரிந்தவர்களை மீட்ட வருவாய்த் துறையினரைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

திருவள்ளூர்: செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த 247 பேரை கொத்தடிமைகள் என மீட்டு வந்த வருவாய்த் துறையினர், தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செங்கல் சூளை உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.

district-collectors-office-blocked-by-brick-kiln-owners

author img

By

Published : Feb 20, 2020, 1:09 PM IST

திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் தனியார் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 247 பேரை, கொத்தடிமைகள் எனக் கூறி தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் வருவாய்த் துறையினர் மீட்டனர்.

இதையடுத்து நேற்று திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கத்தினர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், செங்கல் சூளை உரிமையாளர்களை அலுவலகத்தின் உள்ளே நுழைய அனுமதிக்காததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறுகையில், ”சில தனியார் தொண்டு நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்திற்காக, சூளைகளில் பணிபுரிபவர்களைக் கொத்தடிமைகள் என பொய்யான தகவலைக் கூறி, வருவாய்த் துறையினர் உதவியுடன் அழைத்துச் செல்கின்றனர். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி குறையும். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்க நேரிடும்.

வருவாய்த்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மேலும், இதுபோன்று சுயலாபத்திற்காக இயங்கும் தனியார் தொண்டு நிறுவனங்களை கண்டித்தும், அதற்கு துணைபோகும் வருவாய்த் துறையினரைக் கண்டித்தும் தாங்கள் அளித்த மனு மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஸ்சி முறைகேடு: திமுக மீது வீண்பழி போடும் ஜெயக்குமார் - கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.