பூவிருந்தவல்லி நகராட்சி சார்பில் ட்ரங்க் சாலையின் இருபுறங்களிலும் கிருமி நாசினி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்னைக்கு வந்து செல்கின்றன. அதேபோல் கோயம்பேடு காய்கறி சந்தைக்கும் வாகனங்கள் வந்து செல்கின்றன.
சென்னையின் நுழைவு வாயிலாக பூவிருந்தவல்லி உள்ளது. இதனால் இந்த வழியாக வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு தானியங்கி கிருமி நாசினி தெளிக்க பிரமாண்டமான கிருமி நாசினி தெளிப்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பூவிருந்தவல்லியை கடந்து செல்லும் இருசக்கர வாகனம் முதல் சரக்கு லாரிவரை அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றது. சாலையில் வாகனங்களுக்குக் கிருமி நாசினி தெளிக்கும் நுழைவு வாயில் அமைத்திருக்கும் முதல் நகராட்சி பூவிருந்தவல்லி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீர்காழியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கைது!