ETV Bharat / state

திருத்தணி முருகன் கோயில் கோபுர தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள்!

author img

By

Published : Jan 18, 2022, 2:15 PM IST

கரோனா பரவல் காரணமாக அனைத்து கோயில்களும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தைப்பூச திருநாளையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் கோபுர தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

திருத்தணி முருகன் கோயில் கோபுர தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள் தொடர்பான காணொலி

திருவள்ளூர்: கரோனா பரவல் காரணமாக ஜனவரி 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து முருகனின் பிரசித்தி பெற்ற திருத்தலங்களுள் ஒன்றான திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று (ஜன.18) தைப்பூச நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

கரோனாவால் இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களின்றியே தைப்பூச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நிகழ்ச்சியின்போது கலந்து கொள்ளும் பக்தர்கள், பால்காவடி, அலகு குத்துதல் போன்றவற்றில் ஈடுபடுவர்.

நடப்பு ஆண்டில் அனுமதி இல்லாத காரணத்தால் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளத்தின் படிக்கட்டுகளில் தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர். மலைக்கோயில் படிக்கட்டுகளில் தடைகளை மீறி மேலே சென்ற சில பக்தர்கள், கற்பூரம் ஏற்றி கோபுர தரிசனம் செய்தனர்.

திருக்கோயிலில் நடைபெறும் தங்கத்தேர், கேடய உற்சவம், ஆகிய நிகழ்ச்சிகள் எதுவும் இந்த ஆண்டு நடைபெறவில்லை. திருக்கோயில் வளாகத்தில் சிறப்பு காவல்துறை பாதுகாப்பு எதுவும் வழங்கப்படாததால் பக்தர்கள் மலையடிவாரத்தில் சாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ’அப்பா மட்டும் போதும்...’ - சொல்லாமல் சொல்லும் ரஜினி மகள்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.