திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த அனந்தேரி கிராமத்திற்குள் நீர் தேடிவந்த புள்ளிமான் கிராம மக்களால் மீட்கப்பட்டது. காலை நேரத்தில் கிராமத்தை ஒட்டியுள்ள ஆரணி ஆற்றுப்படுகையிலிருந்து திடீரென வந்த புள்ளிமானை தெரு நாய்கள் துரத்தியதால் பயத்தில் ஓடியுள்ளது.
பின்னர் அங்கிருந்த இளைஞர்கள், கிராமத்தினர் புள்ளிமானை பத்திரமாக மீட்டு காவல் துறையினர், வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பென்னலூர்பேட்டை காவல் துறையினர், வனத் துறையினர் புள்ளிமானை மீட்டுச்சென்று காப்புக்காட்டில் விட்டனர்.