ETV Bharat / state

போதையில் காவலரைத் தாக்கிய கவுன்சிலர், வருவாய் அலுவலரின் உதவியாளர் கைது - கவரப்பேட்டை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே காவலரைத் தாக்கிய சின்னம்பேடு கவுன்சிலர், வருவாய் அலுவலரின் உதவியாளர் ஆகிய இருவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Councilor and revenue officer assistance arrested for attacked police
போதையில் காவலரைத் தாக்கிய கவுன்சிலர், வருவாய் அலுவலரின் உதவியாளர் கைது
author img

By

Published : Dec 30, 2020, 6:13 AM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிபவர் ஹரிபாபு. இவர், நேற்று மாலை ஐயர் கண்டிகையில் நடைபெற்ற ஏ.ஆர். ரகுமானின் தாயார் இறுதிச்சடங்கு நிகழ்வில் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு இரவு சுமார் 11மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, சின்னம்பேடு மேம்பாலத்தின் கீழே சாலையோரம் மது அருந்திக்கொண்டிருந்த சின்னம்பேடு கவுன்சிலர் சந்திரசேகர், திருவள்ளூர் வருவாய் அலுவலரின் உதவியாளர் தேவராஜ் ஆகியோரை ஹரிபாபு கண்டித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த கவுன்சிலர், வருவாய் அலுவலரின் உதவியாளர் ஹரிபாபுவை தாக்கியுள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்த காவலர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கார்ப்பேட்டை காவலர்கள் கவுன்சிலர், மாவட்ட வருவாய் அலுவலரின் உதவியாளர் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணம் ஊராட்சியில் பாஜக பிரமுகரை கொலை செய்ய முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.