திருவள்ளுவர் மாவட்டத்தில் நேற்று (செப்.20) ஒரே நாளில் 207 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 140ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 27 ஆயிரத்து 922 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 1697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 10 நாள்களில் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் வைரஸ் தொற்றால் 521 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே, 1644 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாதவாறு அனைத்து அரசு மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் சுற்றுப்புறம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கைகளை அடிக்கடி கழுவவேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.