கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என 300 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 160க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள், மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், உணவு வசதிகள், கழிவறை வசதிகள், குப்பைகள் சரிவர அள்ளுவது கிடையாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டபட்டவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து பூந்தமல்லி-குன்றத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகள் ரஜினி பாட்டுக்கு குத்தாட்டம்!