ETV Bharat / state

மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் - etvbharta

கரோனா தொற்று மூன்றாவது அலை பரவலை எச்சரிக்கும் விதமாக திருவள்ளூர் பேருந்து நிலையம், சந்தைப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்.

மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்

author img

By

Published : Aug 2, 2021, 8:58 PM IST

Updated : Aug 2, 2021, 9:30 PM IST

திருவள்ளூர்: கரோனா மூன்றாம் அலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவள்ளூர் பேருந்து நிலையம், சந்தைப் பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் இன்று (ஆக. 02) வழங்கினர்.

மேலும், பேருந்தில் பயணிக்கும் பயணிகள் சமூக இடைவெளியுடன் இருத்தல், கிருமிநாசினி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனப்பேருந்து பயணிகளுக்கு அறிவுறுத்தியதுடன், சந்தைப் பகுதியில் வியாபாரிகளிடம் முகக்கவசம் அணியாமல் வரும் நுகர்வோர்களுக்கு பொருள்களை விற்பனை செய்யவேண்டாம் எனவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வியாபாரிகள் அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு
மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு

உறுதிமொழி

பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கரோனாவிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்களை ஏற்று மக்கள் செயல்பட வேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கூறுகையில், "பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு மூன்றாம் கரோனா அலை தொற்றினைத் தடுக்க வேண்டும். பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

அறிவுறுத்தல்

பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம், கிருமிநாசினியைப் பயன்படுத்தி மூன்றாம் அலையைத் தடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்நிகழ்வில் திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், மருத்துவம், சுகாதாரத் துணை இயக்குநர் ஜவஹர்லால் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிப்போம் - மருத்துவர் ராமதாஸ்'

Last Updated : Aug 2, 2021, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.