ETV Bharat / state

குழாய் இங்கே தண்ணீர் எங்கே? ஆத்திரமடைந்த கிராம மக்கள்! - தண்ணீர் குழாய் அமைப்பதில் முறைகேடு

திருவள்ளூரில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் குழாய்களை மட்டும் அமைத்து, குடிநீர் இணைப்பு வழங்காமல் புகைப்படம் மட்டும் எடுத்து முறைகேடு செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழாய் இருக்கு தண்ணீர் என்கே
குழாய் இருக்கு தண்ணீர் என்கே
author img

By

Published : Jul 16, 2021, 1:55 PM IST

திருவள்ளூர்: பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் ஊராட்சியில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்து வந்தனர்.

இதற்குப் பலனாக தற்போது ஒன்றிய அரசின் ‘ஜல் ஜீவன் அபியான்’ திட்டத்தின் கீழ் திருப்பாச்சூர் ஊராட்சிக்கு சுமார் 2 கோடிய 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியுடன் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குடிநீர் இணைப்பு வழங்கவில்லை

இதற்கான ஒப்பந்தம் இரண்டு ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு ஒப்பந்ததாரர் குடிநீர் தொட்டி கட்டி முடித்து, வீடுகளுக்கு முறையாக குடிநீர் குழாய் அமைத்து, குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளார். ஆனால், மற்றொரு ஒப்பந்ததாரரான திருப்பாச்சூர் ஊராட்சிமன்ற தலைவரின் மனைவி, பணிகளை சரியாக முடிக்காமல் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் குழாயை சுவற்றிலும் கம்பின் உதவியுடனும் கட்டி வைத்து, வீட்டின் உரிமையாளரை பக்கத்தில் நிற்க வைத்து புகைப்படம் மட்டும் எடுத்ததாக கூறப்படுகிறது.

குடிநீர் குழாயை மட்டும் வைத்துவிட்டு புகைப்படம் எடுத்து 20 நாள்களுக்கு மேலாகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கூறுகையில், “ஒன்றிய அரசின் ‘ஜல் ஜீவன் அபியான்’ திட்டத்தின் மூலம் திருப்பாச்சூர் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குடிநீர் குழாயில் முறைகேடு

இந்நிலையில், ஒப்பந்தம் எடுத்த இரண்டு ஒப்பந்ததாரர்களில் ஒருவரான ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி, 200க்கும் மேற்பட்ட வீடுகளில் முறைகேடாக குழாய்களை மட்டும் வைத்துவிட்டு புகைப்படம் எடுத்துச் சென்றனர். புகைப்படம் எடுத்து சுமார் 20 நாள்களுக்கு மேலாகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.

போட்டாவுக்கு போஸ் கொடுப்பதற்காக போடப்பட்ட குழாய்

எனவே குடிநீர் குழாய் பதிப்பதில் முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி, அவருக்கு துணையாக இருக்கும் அலுவலர்கள் ஆகியோரது மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒன்றிய அரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: அம்மா குடிநீர் : மீண்டும் விற்பனை செய்ய கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.