ETV Bharat / state

வடசென்னை அனல்மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : May 13, 2020, 9:57 AM IST

திருவள்ளூர்:ஊரடங்கு காரணமாக பணிக்கு வராததால் தங்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து வடசென்னை அனல்மின் நிலையம் வாயில் ஒப்பந்த தொழிலாளர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பளம் வழங்காததை கண்டித்து  வடசென்னை அனல்மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகளில் 1830 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மாதம் ரூபாய் 6000 முதல் 10,000 ரூபாய் மட்டுமே ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

காரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் மட்டுமே 33 விழுக்காடு பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்து வந்ததாலும் போக்குவரத்து வசதி இல்லாததாலும் பணிக்கு வர இயலவில்லை.

இதனால் பணிக்கு வராத அவர்களுக்கு கடந்த மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து அனல்மின் நிலைய வாயிலில் தகுந்த இடைவெளியை பின்பற்றி சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் இணைந்து ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவை மதிக்காமல் அனல் மின்நிலைய நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதனை மதிக்காமல் தங்களுக்கு ஊதியம் வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவதற்கும், மின்சார சட்டத்தை திருத்தும் மசோதோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். உடனடியாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க அனல்மின் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஏழை தொழிலாளர்களை சுரண்டும் பாஜக அரசு - ஸ்டாலின் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.