திருவள்ளூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் கரைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இது குறித்து திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் டி.எஸ்.பி சந்திரதாசன் தலைமையில் இந்து முன்னணியினர், பாஜக, பொதுமக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
காவல் துறை அறிவுறுத்தல்
இந்த கூட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் சிலைகள் வைக்க, ஊர்வலமாக எடுத்துச் செல்வது போன்றவை குறித்து அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
அரசுக்கு கோரிக்கை
மேலும், தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் எச்சரித்தினர்.
இதைத் தொடர்ந்து பேசிய இந்து முன்னணியினர், தங்களது சிலைகளை வைத்து, ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு அனுமதியளித்து அரசு உத்திரட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி விழா - தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை