இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் மற்றும் இணைவழி வகுப்புகள் நடத்த அதிகப்படியான கல்விக் கட்டணம் செலுத்துமாறு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது.
தமிழ்நாடு அரசின் ஆணை மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றை மீறி அவர்களை நிர்பந்தம் செய்யக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றை மீறி செயல்படும் பள்ளிகளின் மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.