ETV Bharat / state

குடிமராமத்து பணிகள் மக்கள் இயக்கமாக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூர்: குடிமராமத்து பணிகள் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு நீர்நிலைகள் தூர்வாரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

cm
author img

By

Published : Aug 8, 2019, 7:21 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பனப்பாக்கத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் சூர பாக்கம் கிராமத்தில் வாட்டர் மிஷின் திட்டத்தின் கீழ் நடைபெறும் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின் பேசிய அவர், வறட்சியான காலகட்டத்திலேயே நீராதாரங்களை சீரமைத்து மழை நீரை சேமிக்க இது போன்ற குடிமராமத்து பணிகள் துவக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக கிடப்பில் உள்ள இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது. இந்த குடிமராமத்து பணிகள் மூலம் மக்கள் இயக்கமாக இது மாற்றப்பட்டு வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கப்படும்.

மழைநீரை சேமிக்க ரூ. 199.99 கோடி மதிப்பில் 1,829 ஏரி பணிகள் விவசாயிகள் துணையோடு நடைபெற்று வருகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.1,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கடல் முகத்துவாரம் இணையும் பகுதி வரை கழிவுகள் கலக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் அருகே 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் அருகே உணவு பூங்கா 2000 கோடியிலும் கால்நடை பூங்காவும் அமைக்கவுள்ளதாகவும் பதவிக்காக எப்படியும் முதுகை வளர்ப்பவர்கள் திமுகவினர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடி மராமத்து பணிகள் ஏரியை தூர் வாரும் பணிகளை துவக்கி வைத்து பேசுகையில் தெரிவித்தார்

Body:திருவள்ளூர் மாவட்டம் அருகே உணவு பூங்கா 2000 கோடியிலும் கால்நடை பூங்காவும் அமைக்கவுள்ளதாகவும் பதவிக்காக எப்படியும் முதுகை வளர்ப்பவர்கள் திமுகவினர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடி மராமத்து பணிகள் ஏரியை தூர் வாரும் பணிகளை துவக்கி வைத்து பேசுகையில் தெரிவித்தார்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பனப்பாக்கம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை போட்டு மண்வெட்டியால் தனது கரத்தால் மண்ணை வெட்டி பணிகள் தொடங்கி வைத்தார் .204ஏக்கர் பரப்பளவில் சேரியில் குடி மராமத்து பணிகளை சூர பக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார் பின்னர் சூர பாக்கம் கிராமத்தில் வாட்டர் மிஷின் திட்டத்தின் கீழ் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக வழிநெடுகிலும் கட்சி தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து முதல்வரை வரவேற்றனர் சூர பாக்கம் ஏரிகளை சீரமைக்கும் பணிகளை துவக்கி பின்னர் பேசிய முதலமைச்சர் வறட்சியான காலகட்டத்திலேயே நீராதாரங்களை சீரமைத்து மழை நீரை சேமிக்க இது போன்ற குடி மராமத்து பணிகள் துவக்கப்பட்டு உள்ளது. இதை மக்கள் இயக்கமாக மாற்றப்படும் என தமிழக முதலமைச்சர் பேசினார் தமிழகத்தில் 30 ஆண்டுகாலமாக செயல்படுத்தாத திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது என்றும் இந்த குடி மராமத்து பணிகள் மூலம் மக்கள் இயக்கமாக இது மாற்றப்பட்டு வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க படும் என்றும் குடி மராமத்து பணிகளை தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

மழைநீரை சேமிக்க 199.99 கோடி மதிப்பில் 1829 ஏறி பணிகள் விவசாயிகள் துணையோடு நடைபெற்று வருவதாகவும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 1,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் 61 கோடி நிதி ஒதுக்கி காவிரி திட்டம் கடல் முகத்துவாரம் இணையும் பகுதி வரை நடைபெற உள்ளதாகவும் கழிவுகள் கலக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பவானி தாமிரபரணி வைகை ஆறு காக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதுமட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடாக 3,400 கோடி ரூபாய் பெற்று தங்க அரசு அம்மா அரசு என்றும் உணவு பூங்கா 2 ஆயிரம் கோழிகள் கால்நடை பூங்கா அமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் பின்னர் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பொதுத் துறை சார்பில் பசுமை வீடு சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சலவைப்பெட்டி முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் காசோலை பிரதம மந்திரி அவாஸ் யோஜனா அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பயனாளிகளுக்கு வழங்கினார் இதில் அமைச்சர் எஸ் பி வேலுமணி அமைச்சர் பென்ஜமின் அமைச்சர் மாபா பாண்டியராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுமியும் பலராமன் அலெக்சாண்டர் விஜயகுமார் மற்றும் நரசிம்மன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.