ETV Bharat / state

திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சஞ்ஜீப் பானர்ஜி ஆய்வு - chief justice sanjeeb bannerjee at thiruvallur

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இன்று ஆய்வு செய்து நீதிபதிகளுடன் வழக்குகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

திருவள்ளுர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சஞ்ஜீப் பானர்ஜி ஆய்வு

author img

By

Published : Jun 19, 2021, 6:23 PM IST

திருவள்ளூர்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இன்று திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். கரோனா காலத்தில் நடத்தப்பட்டுவரும் வழக்கு பணிகள் தொடர்பாக நீதிபதிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

அதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தலைமை நீதிபதியிடம், நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர் நீதிமன்றம், வங்கி, அஞ்சல் நிலைய அலுவலகம், கேண்டீன் போன்ற வசதிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

பின்னர் நீதிபதிகள், வழக்கறிஞர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பேருந்து சேவைக்கு பரிந்துரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.